ரசிக்க... ருசிக்க...

மாக்டெய்ல் ரெஸிப்பி: டேட்ஸ்  பனானா ஆரஞ்சு  ஸ்மூத்தி! 

10 நிமிடங்கள் பிரிஜ்ஜில் வைத்து எடுத்து கண்ணாடி டம்ளர்களில்  அலங்காரமாக ஆரஞ்சு ஸ்லைஸ்கள் சொருகிப் பரிமாறலாம்.  

கார்த்திகா வாசுதேவன்

தேவையான பொருட்கள்:
பேரிச்சம் பழம் (அ) டேட்ஸ்: 4
ஆரஞ்சுப் பழம்: 1
கனிந்த வாழைப்பழம்: 1
காய்ச்சி ஆற வைத்த பால்: 2 கப் 
சர்க்கரை (அ) தேன்: தேவையான அளவு 
ஆரஞ்சு ஸ்லைஸ் -1 
செய்முறை: 

ஆரஞ்சு பழத்தை தோலுரித்து விதை நீக்கி வைக்கவும், வாழைப்பழத்தை தோலுரித்தும் டேட்ஸ் விதை நீக்கியும் எடுத்துக் கொள்ளவும். மூவகைப் பழங்களையும்  மிக்சியில் இட்டு 1/2 கப்ஆ றிய பாலுடன் சேர்த்து நன்கு அரைக்கவும். இந்தக் கலவையுடன் மீதமுள்ள பால் சேர்க்கவும். இவற்றோடு தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்தக் கலவையை  10 நிமிடங்கள் பிரிஜ்ஜில் வைத்து எடுத்து கண்ணாடி டம்ளர்களில்  அலங்காரமாக ஆரஞ்சு ஸ்லைஸ்கள் சொருகிப் பரிமாறலாம்.  

பலன்:
ஆரஞ்சில் விட்டமின் 'சி' இருக்கிறது கண்கள் மற்றும் சருமத்திற்கு நல்லது, வாழைப்பழத்தில் பொட்டாஷியம் இருக்கிறது ஜீரணத்திற்கு நல்லது. டேட்ஸில் இருக்கும் இரும்புச் சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT